தற்போது, சமந்தாவின் மார்க்கெட் ஹிந்தி சினிமா வரை பறந்து விரிந்து, கதாநாயகி மட்டுமின்றி, கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கதையின் நாயகியாக படங்களில் நடிக்க, 2 முதல் 3 கோடி கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார். அதே சமயம், முன்னணி, ‘ஹீரோ’க்களுடன் நடிப்பதற்கு, 3.5 கோடி வரை சம்பளம் கேட்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கேள்வி கேட்டால், ‘கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில், என்னை சுற்றியே மொத்த கதையும் சொல்லும்.

 இதனால், எனக்கு மனதளவில் திருப்தி கிடைக்கும். ஆனால், முன்னணி, ‘ஹீரோ’களுக்கு ஜோடியாக நடிக்கும் போது, என்னை, ‘கிளாமருக்கு’ மட்டுமே பயன்படுத்தி, ‘டம்மி’ பண்ணி விடுகின்றனர்.

‘அப்படி நடிப்பதால், மனதளவில் எனக்கு எந்த திருப்தியும் இல்லை.
அதன் காரணமாகவே, சம்பளம் விஷயத்திலாவது திருப்திகரமாக இருக்கட்டுமே என்று, இது போன்ற படங்களில் நடிப்பதற்கு படக்கூலியை உயர்த்துகிறேன்…’ என்று கூறியிருக்கிறார்.