மோசமான வானிலை காரணமாக நேற்று நாடு திரும்பிய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அண்டார்டிகாவில் இன்று பாதுகாப்பாக தரையிறங்கினார்.

ஸ்காட் பேஸின் 65வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட பிரதமர் ஆர்டெர்ன் தென் துருவத்திற்குச் செல்கிறார்.

இந்நிலையில் பிரதமர் ஆர்டெர்ன் McMurdo Sound இல் தரையிறங்கி உள்ளார். மற்றும் ஹாக்லண்ட் பனி வாகனம் மூலம் அவர் ஸ்காட் தளத்திற்கு பயணிக்க உள்ளார்.

அண்டார்டிகாவில் கிவிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளை பிரதமர் ஆர்டெர்ன் நேரடியாகப் பார்ப்பார் மற்றும் பனியில் வேலை செய்வதில் உள்ள சவால்களை அவர் தெரிந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட் தளத்தின் 344 மில்லியன் டாலர் மதிப்பிலான மறுவடிவமைப்புக்கான ஆரம்ப வேலைகளையும் பிரதமர் ஆடர்ன் பார்வையிடுவார் என கூறப்படுகிறது.

இந்த திட்டம் ஆராய்ச்சி மையத்தின் எதிர்காலத்தை குறைந்தது அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கும் என நம்பப்படுகிறது.