எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு முட்டை விலை மேலும் உயரலாம் என்றும் இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் சுசந்த மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்

கண்டியில்  நடைபெற்ற இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் வருடாந்த விஞ்ஞான அமர்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்