தமிழ் திரைஉலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு.

ரஜினி, விஜய், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரைஉலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகி விட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் யோகி பாபு இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.