நடிகர் ஜெயம் ரவிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது...

"எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்"

"என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக கவசம் அணிந்து பாதுகாப்பக இருங்கள்" என தெரிவித்துள்ளார்.