சவூதி அரேபியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) இலக்காகாத 70 சதவீத குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்க சவூதி சுகாதார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

 

அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசிகளின் இலக்கை எட்ட முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்."கொரோனா தொற்றுக்கு இலக்காகவர்களுக்கு வரும் மாதங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கப்படும்" என்று தடுப்பு சுகாதாரத்திற்கான அமைச்சின் உதவி துணை செயலாளர் டாக்டர் அப்துல்லா அசிரி தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், தொற்று உறுதி செய்யப்படாமல் எந்தவொரு 16 வயதிற்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படமாட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரங்களில் நாட்டிற்கு தடுப்பூசிகள் வருவதற்கான தெளிவான அட்டவணையை அறிவிக்க இராச்சியம் திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

"கோவாக்ஸ் அமைப்பு மூலம், தடுப்பூசியைப் பெறுவதற்கு இராச்சியம் இரண்டு பாதைகளில் செயல்பட்டது, இது G20 ஐ உருவாக்குவதற்கும் நிதியளிப்பதற்கும் ஒரு பங்கைக் கொண்டிருந்தது.

 

"சவூதி அரேபியா இந்த வசதி மூலம் அதிக அளவு தடுப்பூசிகளைப் பெறும், அதே நேரத்தில் இரண்டாவது பாதையானது பெரிய நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து கோவாக்ஸ் மூலம் ஈடுகட்ட முடியாத இடைவெளியை ஈடுகட்டும்" என்றும் அவர் மேலும் கூறினார்.