நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவராக இருந்த நாசரை எதிர்த்து போட்டியிட்டவர் பிரபல டைரக்டர் மற்றும் நடிகரான பாக்யராஜ்.

அந்த தேர்தலில் நாசர் வெற்றி பெற்றார். இதையடுத்து பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் போடியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கே.பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார்.

அவருடன் நடிகர் உதயாவும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இருவருமே சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.