தனுஷ் அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது. இதனிடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படம் சம்பந்தப்பட்ட தகவல்களும் வந்தன.

இந்நிலையில் நேற்று காலை போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து நேற்றிரவு  'தி கிரே மேன்' படத்தில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றார்.