முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்குபவர் அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ்.

40 வயதான செரீனா இதுவரை 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இந்நிலையில் இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு பின்னர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இனி தனது தனது குடும்பத்திற்காக நாட்களை செலவளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ” வாழ்க்கையில் அனைவருக்கும் எப்போதாவது வேறு திசையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதுவும் நமக்கு பிடித்தமான ஒன்றை விட்டு விலக வேண்டியிருக்கும். அந்த சூழல் தற்போது எனக்கும் வந்துள்ளது. கடினமாக இருந்தாலும், தற்போது டென்னிஸை விட்டு விலகி தான் ஆக வேண்டும்.

அடுத்தகட்டமாக நான் ஒரு சிறந்த தாயாக இருப்பதில் கவனம் செலுத்த போகிறேன். சில வருடங்களுக்கு முன்பு செரீனா வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். பின்னர் எனக்கென்று ஒரு குடும்பம் ஆனது. எனவே இனி அதில் மட்டும் கவனத்தை செலுத்தப்போகிறேன் என செரீனா கூறியுள்ளார்.