புதிய இந்திய உயர் ஸ்தானிகராலய கட்டிடம் வெலிங்டனில் பாராளுமன்ற வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் வண்ண கான்கிரீட், பளிங்கு, கண்ணாடி மற்றும் உலோகத்தால் கட்டப்பட்டுள்ளது.

மேலும் கட்டிடத்தின் முகப்பில் உலோகம் மற்றும் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட ட்ரேசரி திரைகள் ஒளியை வெளியிடும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணியளவில் கிரகப்பிரவேசம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் குறித்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு  அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது‌.

இச் செய்தியை‌ நியூசிலாந்திற்கான இந்திய உயர் ஸ்தானிகர் முக்தேஷ் பர்தேஷி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முகவரி : 72 Pipitea St ,Wellington 

கிரகப்பிரவேச நிகழ்வில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய ; https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfUyBpoQ6rpLritclDa7PZ7nNExFHkqhYH3SWd_rTtAjmbmBg/viewform