Kāpiti Coast ஐ இரண்டு சூறாவளிகள் தாக்கின.

Waikanae இல் காலை 11 மணியளவில் ஒரு சூறாவளி தாக்கியதில் மூன்று கட்டிடங்கள் சேதமடைந்தன.

Nicholas Place இற்கு அருகிலுள்ள பகுதியில் சூறாவளி வீசியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

காலை 11 மணிக்குப் பிறகு Nicholas Place இல் வீட்டின் கூரைகள் சேதமடைந்ததாக காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனிடையே மற்றொரு சூறாவளி காலை 11.30 மணியளவில் Otaihanga வில் உள்ள Paraparaumu வை தாக்கியது.

தீ மற்றும் அவசரநிலை மாற்ற மேலாளர் பெலிண்டா பீட்ஸ் கூறுகையில் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை ஆனால் அது சேதத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

குறித்த சூறாவளியால் மரங்கள் வீழ்ந்ததுடன் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

அந்த பகுதியில் உள்ள மின்கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்துள்ளன.