ஆக்லாந்தின் Clevedon இல் ஒரு பணியிட சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Creightons சாலையில் உள்ள ஒரு பணியிடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

காலை 8:50 மணியளவில் சம்பவ இடத்திற்கு மூன்று ஆம்புலன்ஸ்கள் வருகை தந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் WorkSafe க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மரணம் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.