பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார்.

2014 இல் ஜான் கீ பராக் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவைச் சந்தித்ததை அடுத்து நியூசிலாந்து பிரதமர் ஒருவர் ஓவல் அலுவலகத்திற்குச் செல்வது இதுவே முதல் விஜயமாகும்.

இச்சந்திப்பில் பைடன் மற்றும் பிரதமர் ஆர்டெர்ன் ஆகியோர் பசிபிக் பிராந்தியம், உக்ரைனில் நடந்த போர், இந்திய-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) மற்றும் காலநிலை மாற்றம் பற்றி கலந்துரையாடினர்‌.

காலநிலை மாற்றம், வன்முறை, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது உலகளாவிய முயற்சி... அந்த முயற்சியில் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என என அதிபர் ஜோ பைடன் கூறியதுடன் பிரதமர் ஆடர்னின் தலைமைத்துவத்தையும் பாராட்டினார்.

இதன்போது டெக்சாஸில் நடந்த பள்ளி துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் ஆடர்ன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும் பசிபிக் உள்ளிட்ட பிரச்சினைகளில் அமெரிக்காவும் நியூசிலாந்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று பைடன் வலியுறுத்தினார்.

இச் சந்திப்பு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சிறப்பாக நடந்தது. இதன்போது பிரதமர் ஆர்டெர்ன் பைடனுக்கும் அவரது துணை ஜனாதிபதிக்கும் நியூசிலாந்திற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.