நேற்று சான் பிரான்சிஸ்கோவில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னை சந்தித்த கலிபோர்னியா கவர்னரிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் குறித்து மாநிலத்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான புதிய கூட்டு ஒப்பந்தத்தை  அறிவிப்பதற்காக தாவரவியல் பூங்காவில் வெளிப்புறத்தில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டிற்காக இருவரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் கலிபோர்னியா கவர்னரிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

"இன்று காலை, நான் கொவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்தேன், தற்போது லேசான அறிகுறிகளை அனுபவித்து வருகிறேன். தடுப்பூசி மற்றும் பாக்ஸ்லோவிட் போன்ற சிகிச்சைகளுக்கு நன்றி," என்று அந்த பதிவில் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ஆர்டெர்ன் அமெரிக்க பயணத்திற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு கொவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார்.

பின்னர் அமெரிக்க பயணத்திற்காகவும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யவும் அவர் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.