ஆக்லாந்தின் வடமேற்கு பகுதியில் கார் மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 10.15 மணியளவில் Riverhead இல் உள்ள Coastville-Riverhead Highway மற்றும் Alice Street சந்திப்பில் இடம்பெற்ற குறித்த விபத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இந்நிலையில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்து கிடந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.