வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

 

அதன்படி இணையதளத்தில் சர்வேதச பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு இதனைத் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைவர் அப்தெல்மாலெக் துரூக்தெல் கொல்லப்பட்டதையடுத்து, ‘ஏக்யூஐஎம்’ என்றழைக்கப்படும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும், மாலியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களால் கடத்திச் செல்லப்பட்ட சுவிஸ்லாந்து நாட்டவர் பீட்ரைஸ் ஸ்டாக்லி உயிரிழந்தாகவும் ஏக்யூஐஎம் அமைப்பு தெரிவித்தது.