நேற்றைய தினம் இரவு வைகாடோவின் Gordonton பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Piako சாலை மற்றும் Waverley சாலை சந்திப்பில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து இரவு 8.10 மணிக்கு காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த விபத்து தொடர்பில் தீவிர விபத்து பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனிடையே நேற்று இரவு Waimate இல் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Glenavy இல் உள்ள Ikawai சாலையில் இரவு 10:30 மணிக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீவிர விபத்து பிரிவு அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.