காலநிலை மாற்றம் தொடர்பாக கலிபோர்னியாவுடன் இணைந்து பணியாற்ற நியூசிலாந்து ஒரு கூட்டு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.

பிரதமர் ஜெசிந்தா ஆடர்னின் அமெரிக்காவிற்கான‌ உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பிரதமன் ஆர்டெர்ன் மற்றும் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது சான் பிரான்சிஸ்கோவில் இந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

இதன் மூலம் நியூசிலாந்தும் கலிபோர்னியாவும் சுற்றுச்சூழலுக்குப் பயனளிக்கும் திட்டங்களில் இணைந்து செயல்பட உள்ளன.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் கலிபோர்னியா உலகளாவிய ரீதியில் குறைந்த-உமிழ்வு மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வீரராகவும், எங்கள் முயற்சிகளில் ஒரு முக்கிய பங்காளியாகவும் இருக்கும் என்று பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.

நாம் ஒவ்வொருவரும் உமிழ்வைக் குறைப்பதில் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய பரந்த அடிப்படையிலான திட்டங்களைக் கொண்டுள்ளோம், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதை இரு நாடுகளும் இலக்காகக் கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.