New Plymouth இல் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 11 மணியளவில் Devon தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட குறித்த தீ விபத்துக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இந்நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், பொலிஸார் இன்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.