சமீபத்தில் ஆக்லாந்து முழுவதும்  கும்பல் தொடர்பான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் துப்பாக்கிகள் போதைப்பொருள் மற்றும் பிணைக் குற்றங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் 10 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நான்கு துப்பாக்கிகள் மற்றும் 250 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நாட்களில் நடந்த இந்த வெட்கக்கேடான வன்முறையில் பொலிசாருக்கு சகிப்புத்தன்மை இல்லை என கவுண்டிஸ் மானுகாவ் மாவட்டத் தளபதி கண்காணிப்பாளர் ஜில் ரோஜர்ஸ் கூறினார்.

ஆக்லாந்து முழுவதும் பலத்த பொலிஸ் பிரசன்னம் இருக்கும்.

மேலும் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் நாங்கள் தொடர்ந்து தீவிரமாக நடவடிக்கை எடுப்போம்‌ என அவர் தெரிவித்தார்.

மேலும் தங்கள் சமூகத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையிடம் புகாரளிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.