Invercargill இல் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றதை அடுத்து பொலிசார் ஒருவரை கைது  செய்தனர்.

நேற்றைய தினம் இரவு 10.20 மணியளவில் Invercargill,  downtown இற்கு கிழக்கே 20km தொலைவில் உள்ள Kapuka கிராமப்புற பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் Greg Baird கூறுகையில் இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் ஒருவருக்கு காலில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக சவுத்லேண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவர் தெரிவித்தார்.

குற்றவாளியும் பாதிக்கப்பட்டவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் எனவும் பேர்ட் கூறினார்.

இந்நிலையில் 34 வயதான கைது செய்யப்பட்ட நபர் இன்று இன்வெர்கார்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் பொலிஸார் தேடவில்லை.