நியூசிலாந்து சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் இற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொண்டபோதே இவ்வாறு அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் லேசான அறிகுறிகளுடன் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும், திட்டமிட்டதை விட தாமதமாக நியூசிலாந்து திரும்புவார் என்றும் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில் ஜெனிவாவிலிருந்து வெளியேறிய சுகாதார அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் உடன் சட்டமன்றத்தில் கலந்து கொண்டார்.

இருவரும் தகுந்த அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.