இந்த வாரம் ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான Mt Albert இல் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஒரு இளைஞனை தேடும் ஆக்லாந்து பொலிஸார் அவர் மிகவும் ஆபத்தானவர் என்றும் அவரை அணுகக்கூடாது என்றும் கூறுகின்றனர்.

செவ்வாய்கிழமை மாலை 6.45 மணியளவில் Roy Clements Treeway அருகே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டிடெக்டிவ் கிறிஸ் பாரி, 22 வயதான கிறிஸ்டியன் எட்யூட்டி என்ற இளைஞன் இந்த மரணம் தொடர்பாக தேடப்பட்டு வருவதாக கூறினார்.

அவரை நாங்கள் ஆபத்தானவராகக் கருதுகிறோம். மக்கள் இரவில் அந்த பகுதியில் நடந்து சென்றால், நன்கு வெளிச்சம் உள்ள பகுதிகளில் நடக்க நாங்கள் அறிவுறுத்துவோம்."

மக்கள் தனியாக அப்பகுதியில் நடமாடக் கூடாது என்றார் பாரி.

இது ஒரு மிருகத்தனமான தாக்குதல் என்றும் அவர் கத்தியை ஆயுதமாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே உயிரிழந்த நபர் குறித்த எந்த விவரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

பொலிஸாரின் விசாரணையின் ஒரு பகுதியாக நடைபாதை மூடப்பட்டுள்ளது.