இன்று நியூசிலாந்தில் 6380 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 04 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 16 பேர் உட்பட 508 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே நாட்டில் நேற்றையதினம் 04 முதல் டோஸ்கள், 10 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 182 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டன.

மேலும் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியின் 17 முதல் டோஸ் மற்றும் 142 இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டன.

இதன்படி நியூசிலாந்தில் இதுவரை தடுப்பூசி பெறுவதற்கு தகுதியான மக்கள் தொகையில் 96.4 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியையும், 95.2 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசியையும், 71.1 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.