ஆக்லாந்தில் நள்ளிரவில் ஆர்மிஸ்டன் டவுன் சென்டரில் (Ormiston Town Centre)  நடந்த கொள்ளை சம்பவத்தில் மூன்று திருடப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு அறிக்கையில், கிழக்கு ஆக்லாந்தின் மையத்தில் உள்ள மூன்று கடைகளை குறிவைத்து பல குற்றவாளிகள் வாகனங்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாலை 1.10 மணியளவில் நடந்த நடந்த இச் சம்பவத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் துணிகள் திருடப்பட்டன.

இந்நிலையில் திருடப்பட்ட இரண்டு வாகனங்களில் குற்றவாளிகள் தப்பிச் சென்றனர்.

டவுன் சென்டரின் மேலாளர்கள், ஆக்லாந்து முழுவதும் ராம் ரெய்டுகளின் அதிகரிப்பு குறித்து கவலைப்படுவதாகவும், மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.