நியூசிலாந்து முழுவதும் அன்சாக் தின (Anzac Day) நினைவேந்தல்களுக்காக ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.

அன்சாக் தினம் என்பது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அனைத்து போர்கள், மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றி இறந்தவர்கள்" மற்றும் "சேவை செய்த அனைத்து ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூசிலாந்து நாட்டினரை பரந்த அளவில் நினைவுகூரும் ஒரு தேசிய நினைவு நாளாகும்.

இது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25 ஆம் திகதி நியூசிலாந்து மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

குறித்த நினைவு நாளான இன்று (25) போரிட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக காலை 6 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பித்தன.

இதில் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும் இரண்டாவது தேசிய அன்சாக் சேவை வெலிங்டனில் உள்ள புகேஹு தேசிய போர் நினைவிடத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இதில் கவர்னர் ஜெனரல், ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மற்றும் துருக்கிய தூதர் உட்பட உயரதிகாரிகள், பொதுமக்கள் என சுமார் 2000 பேர் போர்வீரர்களின் கல்லறையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தேசிய கீதங்கள் விமானப்படை இசைக்குழுவுடன் இணைந்து இளைஞர் பாடகர்களால் பாடப்பட்டன.

பின்னர் அன்சாக் பூங்காவில் உள்ள நினைவிடங்களுக்கு பொதுமக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் முன் ஒரு நிமிட மௌன அஞ்சலி மற்றும் அமைதி பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.