இன்று நியூசிலாந்தில் 5690 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 684 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 9 வயதுக்கு உட்பட்ட இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியதை அடுத்து அவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது இறப்பு எண்ணிக்கையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 20 பேர் உட்பட 490 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.