வெலிங்டனில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்ததை அடுத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள், ஒன்று மத்திய நகரத்திலும் மற்றொன்று Tawa- விலும் இடம்பெற்றதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகாலை 5 மணிக்குப் பின்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டிக்சன் தெருவுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

பின்னர் இருவரும் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு Tawa வில் உள்ள ஒரு குடியிருப்புக்கு வெளியே காலை 7 மணியளவில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.

வாகனத்தில் இருந்து பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் SH59 இல் வடக்கு நோக்கிச் சென்ற வாகனத்தில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

"இது தற்செயலான தாக்குதல்கள் அல்ல என்று பொலிஸார் நம்புவதாக அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுகள் உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் வருத்தமளிப்பதாக இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒருவழி டிக்சன் தெரு, Taranaki தெருவைச் சந்திக்கும் இடத்தில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு P050338863 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.