31 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் தங்கியிருந்த ஜப்பானிய மாணவியை டோக்கியோவில் சந்தித்துள்ளார் பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன்.

பிரதமர்  ஆர்டெனுக்கு 10 வயதாக இருந்தபோது மடோகா வதனாபே என்ற குறித்த மாணவி அவருடன் மோரின்ஸ்வில்லில் (Morrinsville) தங்கியிருந்தார்.

பின்னர் தனது 10 வயதிலிருந்து பிரதமர் அந்த மாணவியை பார்க்கவில்லை.

இந்நிலையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் தனது வீட்டில் 31 வருடங்களுக்கு முன்பு தங்கியிருந்த மாணவியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று பிற்பகல் பிரதமர் ஆர்டெர்ன் மற்றும் தூதுக்குழுவினர் கொவிட் பரிசோதனை மேற்கொண்டனர்.

எதிர்மறையாக சோதனை முடிவை பெற்ற நிலையில் அனைவரும் நியூசிலாந்துக்கு திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.