இன்வர்கார்கிலில் (Invercargill) நேற்று நடந்த விபத்தில் 4 வாலிபர்கள் பலியாகினர்.

குயின்ஸ் பூங்காவின் நுழைவாயிலுக்கு அருகில் நேற்று மாலை 4 மணிக்கு முன்னதாக இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன.

ஃபோர்டு ரேஞ்சர் (Ford Ranger) மற்றும் கான்கிரீட் டிரக் இடையே இந்த விபத்து ஏற்பட்டதாக சவுத்லேண்ட் ஏரியா கமாண்டர் மைக் போமன் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் பலியானவர்களில் 16 வயதான மூன்று பேரும் 17 வயதான ஒருவரும் அடங்குவர்.

பொலிசார் விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருவதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு "சோகம்" என்றும் கூறினார்.

விபத்தில் பலியானவர்களின் பெயர்கள் இன்று வெளியிடப்படாது என போமன் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் மூன்று பேர் பிளஃப் (Bluff) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

"இது ஒட்டுமொத்த Bluff சமூகத்திற்கும் ஒரு சோகம். இது அச் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்." எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே பொலிஸார் விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் தகவல்களை முறையிடுகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு P050332364 ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை கொண்டுள்ளது.