இன்வெர்கார்கிலில் (Invercargill) இன்று எற்பட்ட தீவிர விபத்தில் பல்வேறு பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை கூறுகிறது.

குயின்ஸ் பூங்காவின் (Queens Park) அருகில் இந்த விபத்து ஏற்பட்டது.

மாலை 4 மணிக்கு முன்னதாக குயின்ஸ் டிரைவில் கனரக மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட குறித்த விபத்துக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

"துரதிர்ஷ்டவசமாக, பலர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்," என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

St Andrew Street மற்றும் கிங் தெரு இடையே சாலை மூடப்பட்டுள்ளது.

விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் பொலிஸார் தகவல்களை முறையிடுகின்றனர்.

இந்நிலையில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு கோப்பு எண் P050332364 ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.