நியூசிலாந்தில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் ஃபைசர் கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற பிறகு எந்த எதிர்வினையையும் அனுபவிக்கவில்லை என்று சுகாதார அமைச்சகத்தின் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 18,000 பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசிக்குப் பிந்தைய அறிகுறி சரிபார்ப்பு கணக்கெடுப்பில் குழந்தைகளிடம் எந்தவித எதிர்வினையும் அடையாளம் காணவில்லை என்று தெரியவந்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் டிம் ஹன்லோன் கூறுகையில், 21 சதவீத பராமரிப்பாளர்கள் தங்கள் குழந்தைக்கு தடுப்பூசிக்குப் பிறகு எதிர்வினை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

"மிகப் பொதுவாகப் புகாரளிக்கப்பட்ட எதிர்வினைகள் சோர்வு, உட்செலுத்தப்பட்ட இடத்தில் ஒரு எதிர்வினை, தலைவலி மற்றும் உடல் வலி.

இவை அனைத்தும் தடுப்பூசியின் அறியப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள் ஆகும்.

பள்ளி அல்லது பிற அன்றாடச் செயல்பாடுகளைத் தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் ஒரு நாள் அல்லது குறைவாகத் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது.

1 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகள் தடுப்பூசிக்குப் பிறகு மருத்துவரைச் சந்தித்தனர்.

"மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளின் அடிப்படையில் தடுப்பூசிகளுக்குப் பிறகு எவ்வாறான விடயங்களை எதிர்பார்க்கலாம் என்பது நமக்கு தெரியும்.

மேலும் நியூசிலாந்தில் உள்ள எங்களுடைய சொந்த அறிக்கையிடல் அமைப்புகளை வைத்திருப்பது, உள்ளூர் சூழலில் தடுப்பூசி எதிர்பார்த்தபடி செயல்படுவதை உறுதிப்படுத்த உதவுகிறது," டாக்டர் ஹன்லோன் கூறினார்.

260,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்போது குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நியூசிலாந்தில் ஒரு நல்ல அறிக்கையிடல் கலாச்சாரம் உள்ளது, அதாவது தடுப்பூசிக்குப் பிறகு தலைவலி அல்லது கை வலி போன்ற சிறிய விஷயங்களுக்கு கூட மக்கள் புகாரளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று டாக்டர் ஹான்லன் கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசி போட்ட பிறகு சிறியதாக ஒரு எதிர்வினையை அனுபவித்தாலும் கூட, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப்  புகாரளிப்பது முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.