West Coast இல் காணாமல் போனதாகக் கூறப்படும் 64 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹக் கேமரூன் என்ற குறித்த நபர் கடைசியாக Runanga வில் மூன்று வாரங்களுக்கு முன்பு மார்ச் 21 ஆம் திகதி காணப்பட்டார்.

இந்நிலையில் மார்ச் 25 ஆம் அன்று கேமரூனைப் பற்றிய தகவல்களைக் கோரி காவல்துறை முறையீடு செய்தது.

தற்போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் இந்த மரணம் தொடர்பில் விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என‌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட Kotuku Surf Club மற்றும் உள்ளூர் மீட்பு ஹெலிகாப்டரின் உதவிக்கு காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது.