நோர்த்லேண்டின் Whangarei இல் உள்ள மூடப்பட்ட மார்ஸ்டன் பாயின்ட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகின்ற நிலையில் குறித்த போராட்டம் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அங்கு எத்தனை பேர் கூடியிருக்கின்றனர் என்பது தெரியவில்லை.

தற்போது போராட்டம் நடைபெறும் சுத்திகரிப்பு நிலையம் அதிகாரப்பூர்வமாக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி அன்று மூடப்பட்டது.

 'டிக் இன் அட் மார்ஸ்டன்' சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், மார்ஸ்டன் பாயின்ட்டின் சுத்திகரிப்புத் திறனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த எதிர்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களில் "எரிபொருள் பாதுகாப்பை" காப்பாற்ற விரும்புவதாக கூறி வருகின்றனர்.

தளத்தைச் சுற்றியுள்ள எந்தவொரு நடவடிக்கையும் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அல்லது ஊழியர்களின் பாதுகாப்பைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த காவல்துறையுடன் இணைந்து செயல்படுவதாகக் Refining NZ கூறியது.