ஃபிலி சூறாவளி இரண்டு நாட்களுக்கு புயல், கனமழை மற்றும் கடலோர வெள்ளத்தை கொண்டு வரக்கூடும் என்று MetService எச்சரிக்கிறது.

சூறாவளி செவ்வாய்க்கிழமை துணை வெப்பமண்டலத்திலிருந்து North Island ஐ நெருங்கக்கூடும் என தேசிய வானிலை ஆணையம் கணித்துள்ளது.

North Island இன் கிழக்குப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் 24 மணி நேரம் கனமழை பெய்யும்.

மேலும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரத்திற்கு North Island  வலுவான காற்று எச்சரிக்கை உள்ளது.

"இரு திசைகளில் இருந்தும் சிறிது நேரத்திற்கு கடுமையான புயலை வீசும்" என்று MetService தெரிவித்துள்ளது.

Whanganui மற்றும் Hawke's Bay இற்கு வடக்கே உள்ள பகுதிகளுக்கு சதாரண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை முதல் North Island இன் மற்ற பகுதிகளுக்கு குறைவான ஆபத்து உள்ளது.

சூறாவளியின் தடம் மற்றும் நேரம் குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது, எனவே மக்கள் முன்னறிவிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்குமாறு MetService அறிவுறுத்தியுள்ளது.

வெஸ்ட்லேண்ட் மற்றும் ஃபியர்ட்லேண்டிற்கு கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை காலை வரை இந்த பிராந்தியங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.