இன்று காலை இன்வெர்கார்கிலின் (Invercargill) அருகே எற்பட்ட தீ பரவல் அருகிலுள்ள Awarua Bay தீயுடன் இணைவதை தடுக்க தீயணைப்புக் குழுவினர் விரைவாகப் பணியாற்றினர்.

Awarua சதுப்பு நிலத்தில் ஏற்பட்ட தீ, ஒரு வாரமாக 1300 ஹெக்டேருக்கு மேல் எரிந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை Tiwai சாலையில் டிரான்ஸ்மிஷன் லைன் மின்கம்பத்தின் கீழ் ஒரு கார் தீ பற்றி எரிந்து அங்கிருந்து பரவலாக எரிய ஆரம்பித்தது.

காலை 6 மணிக்கு முன்னதாக பணியாளர்கள் வந்தபோது தீ எரிந்து வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

Awarua Bay இல் இருந்து தீ சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

சம்பவக் கட்டுப்பாட்டாளர் டேவிட் கோவேனி கூறுகையில்...

தீயணைப்பு குழுவினர் தீயின் ஓரங்களைச் சுற்றிச் சென்று அதைக் கட்டுப்படுத்தி Awarua Bay இல் தீயுடன் சேருவதைத் தடுத்தனர்.

குழுவினர் குறித்த தீயை ஒரு ஹெக்டேர் பரப்பளவில் மட்டுப்படுத்தினர்‌ என தெரிவித்தார்.

இன்று காலை ஏற்பட்ட தீயை விரைவாகக் கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், 2000 ஹெக்டேர் பொதுப் பாதுகாப்பு நிலம் தீக்கிரையாகி இருக்கும் என்று தீயணைப்பு மற்றும் அவசரநிலை தெரிவித்தது.