கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக டன்னீடன் Octagon இல் முகாமிட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வெளியேறுமாறு முறைப்படி கூறப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் பெரும்பாலும் அமைதியானதாக இருந்தபோதும், டுனெடின் நகர மேயர் ஆரோன் ஹாக்கின்ஸ், இந்த குழு இப்பதற்கான தெளிவான நோக்கம் இல்லை என்று கூறினார்.

தடுப்பூசி பாஸ் தேவைகள் மற்றும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், இவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.

"அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நாங்கள் நேற்று காவல்துறையினரைச் சந்தித்தோம், மேலும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை நிறுத்திவிட்டு
Octagon ஐ விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு வழங்கப்படும்." என ஹாக்கின்ஸ் கூறினார்.

டன்னீடன் நகர கவுன்சில் கடிதம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கியுள்ளது.

இதன்படி அவர்கள் திங்கட்கிழமை மதியம் வெளியேற வேண்டும், அவர்களின் உடைமைகள் அனைத்தையும் அவர்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

"இந்த கடிதம் Octagon Reserve பகுதியை விட்டு வெளியேறுவதற்கான முறையான எச்சரிக்கை"

"இந்த எச்சரிக்கைக்குப் பிறகு Octagon ஐ விட்டு வெளியேற மறுத்தால் அல்லது வெளியேறத் தவறினால் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அத்துமீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.