Christchurch நகர சபையானது, பூகம்பத்தால் சேதமடைந்த சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் முகாமிட்டுள்ள தடுப்பூசி ஆணைகளை எதிர்க்கும் ஒரு குழுவினரை தினமும் காணக்கூடியதாக இருப்பதாக கூறுகிறது.

கவுன்சிலின் பூங்காக்களின் தலைவர் ஆண்ட்ரூ ரட்லெட்ஜ், ஏப்ரல் 1 முதல் Brooker Ave, Burwood அருகே நிலத்தில் குறித்த குழுவினர் தங்கியிருப்பது தங்களுக்குத் தெரியும் என்றார்.

முகாமிடும் மக்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் அந்தப் பகுதியைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, காவல் துறை, தீயணைப்பு மற்றும் அவசரநிலை மற்றும் தொடர்புடைய சமூக சேவை நிறுவனங்களுடன் கவுன்சில் செயல்பட்டு வருவதாக ரூட்லெட்ஜ் கூறினார்.

இந்நிலையில் இந்த குழுவினரின் இருப்பு மற்றும் அவர்களின் சில நடத்தைகள் குறித்து உள்ளூர் சமூகத்திலிருந்து பல புகார்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

"நிலத்தை ஆக்கிரமித்துள்ள குழுவுடன் நாங்கள் தினமும் பேசி வருகிறோம், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ரூட்லெட்ஜ் கூறினார்.