இன்வர்கார்கில் (Invercargill) அருகே உள்ள அவருவாவில் (Awarua) ஏற்பட்ட பெரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை ஏற்பட்ட குறித்த தீ ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் எரிந்து வருகிறது.

ஒன்பது ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒன்பது தரைப்படை வீரர்கள் இன்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவருவா-வைதுனா (Awarua-Waituna) என்பது நியூசிலாந்தின் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய கடலோர ஈரநில அமைப்புகளில் ஒன்றாகும்.

இது பல பறவைகள் மற்றும் பிற உயிரினங்களினங்களின் தாயகமாகும்.

இந்நிலையில் குறித்த தீயினால் ஏற்படும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இழப்புகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என
சுற்றுச்சூழல் சவுத்லேண்ட் (Environment Southland) தெரிவித்துள்ளது.