-அதிர்ச்சி தகவல்

தற்போது இங்கிலாந்தில் கொவிட்- 19 தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் கடந்த ஜனவரி முதலாம் திகதி இங்கிலாந்து வெளியேறியது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அந்நாட்டில் முதலில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைய கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போதய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அவரது தொகுதியிலே தோல்வியை சந்திப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் ஐரொப்பிய ஒன்றிய விவகாரத்தில் போரிஸ் ஜோன்சன் அனுகிய முறைகள் மற்றும் கொரோனாவினை கட்டுப்படுத்த அரசு தவறியமை காரணமாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றின் பரவல் மக்களிடையே மேலும் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளமையால் எதிர்வரும் தேர்தலில் மக்களின் போக்கு முற்றாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தினத்தில் தங்களது உறவுகளை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு பின்பு உடனடியான அதனை போரிஸ் ஜோன்சன் திரும்ப பெற்றது மக்களிடையே அவரின் மதிப்பை அதிகமாக பாதித்தாக தெரிவிக்கப்பட்டள்ளது.