சிங்கப்பூரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக இன்று பிற்பகல் ஐந்து இடங்களில் திடீர் வெள்ளம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ள்ளது.

பல பகுதிகளில் உள்ள கால்வாய்களிலும் வடிகால்களிலும் 90 சதவீதம் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் எச்ச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மாலை வேளையில் வெளியிட்ட மற்றோர் அறிவிப்பில் தவிர்க்கப்பட வேண்டிய பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குளிராகவும் காற்று வீசக்கூடியதாகவும் இருக்கும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் நேற்று எதிர்வு கூறியிருந்தது.

அடுத்த இரு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் எனவும் அதே நேரம் பலத்த இடியுடன் கூடிய கன மழையும் சில நாட்களில் பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மாதத்தின் முதல் பகுதியில் மழை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமைக்கு சராசரிக்கு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அன்றாடம் குளிர்ந்த பருவநிலை நிலவுவது வழக்கம்.

வெப்பநிலை ஓரிரு நாட்களில் 22 பாகை செல்ஸியஸ் முதல் 31 பாகை செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர நாட்களில் அன்றாட வெப்பநிலை 23 பாகை செல்ஸியஸ் முதல் 33 டிகிரி செல்ஸியஸ் நிலவுவது வழக்கம்.

அதேவேளை, மழை காலநிலை குறையும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் அன்றாட அதிகரித்த வெப்பநிலை 34 பாகை செல்ஸியஸை எட்டும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.