ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையிலான மோதலொன்றை உருவாக்குவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முஹம்மட் ஜவாட் ஜரீவ் தெரிவித்துள்ளார்

ஈராக்கிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு தூண்டுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நிலையை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும் டொனால்ட் டிரம்பை இந்த பொறிக்குள் சிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஈராக்கிலிருந்து கிடைக்கும் புதிய புலனாய்வு தகவல்களின் படி இஸ்ரேலிய முகவர்கள் அங்குள்ள அமெரிக்க தலங்களுக்கு எதிராக தாக்குதல்களை தூண்டுகின்றனர் என்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் அவர்களே ! கவனமாயிருங்கள் எந்த வான வேடிக்கையும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஈரானின் வெளி விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.