பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவரின் தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெஷாவர் பொலிஸார் பிரதான சந்தேகநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பெஷாவர் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு கடந்த சில நாள்களுக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுள்ளார். தனது தலையில் அடிக்கப்பட்டிருந்த ஆணியை எடுக்குமாறு வைத்தியரிடம் அவர் கோரினார்.

அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் தலையில் ஆணி எப்படி அறையப்பட்டது என அந்த கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு சமய வழிபாடு மூலம் சிகிச்சை அளிக்கும் உள்ளூர் வைத்தியர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டேன்.

அவரோ, எனது தலையில் 5 சென்டிமீற்றர் அளவிலான ஆணியை அடித்து அனுப்பிவிட்டார். அதனால் ஏற்பட்ட வலியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தயதுசெய்து ஆணியை நீக்கிவிடுங்கள்,” என்றார்.

ஆணி அறையப்பட்டதால் மிகுந்த வலியில் இருந்த பெண் முதலில் தானே ஆணியை அடித்துக் கொண்டதாகக் கூறினார். அவர் தலையில் ஆணியை அறைந்தது வேறொருவர் என்பது பின்னர் தெரியவந்தது,” இதையடுத்து, அவருக்கு ஆணி அகற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வைத்தியர்கள் கூறுகையில், அந்தப் பெண்ணின் தலையில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. சுத்தியல் மூலம் அந்த ஆணியை அடித்திருக்க வேண்டும்.

அவரது தலையில் 2 இஞ்சுக்கு அதிகமாக ஆணி புகுந்திருந்தது தெரிந்தது. ஆணியின் முனை மூளையில் பட்டிருந்தால் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என தெரிவித்தனர்.