பாகிஸ்தானில் பொலிஸார் டிக்-டாக்கில் பதிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் முதன்முறையாக டிக்-டாக்கில் பதிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

எனினும், ஆபாச பதிவுகளை வெளியிடும் கணக்குகள் முடக்கப்படும் என அந்நிறுவனம் அளித்த உறுதியை தொடர்ந்து, 10 நாட்களுக்கு பின் இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பொலிஸாருக்கு டிக்-டாக் பதிவுகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டின் உள்ளூர் ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

இதன்படி, பஞ்சாப்
பொலிஸார் அனைவரும்  பணி நேரத்தில் டிக்-டாக் பதிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.

ஏனெனில், டிக்-டாக்கில் பதிவேற்றி, வைரலாவது, துறைக்கு எதிர்மறை தோற்றம் ஏற்படுத்தும் என்றும் கடிதம் வழியே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை மீறி, சமூக ஊடகத்தில் எந்தவொரு அதிகாரியின் வீடியோ வைரலாவது பற்றி அறியப்பட்டால் துறை ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.