பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இம்மாதம்  இறுதியில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும், இந்த பயணத்தின்போது அவர் அதிபர் புதினை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது நடந்தால் கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யா அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

ரஷ்யா- உக்ரைன் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் இம்ரான்கானின் இந்த ரஷ்யா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.