2019 டிசம்பர் வரை வழமையாக இயங்கி வந்த உலக மக்கள் அதன் பிறகு பல பின்னடைவுகளை சந்தித்துள்ளனர். ஒரு சில ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் தற்போதே உணவுப் பஞ்சம் ஏற்பட தொடங்கிவிட்டதாக ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதற்கெல்லாம் காரணமான கொரோனா தொற்றுக்கு உலக நாடுகள் தற்போது தடுப்பூசியினை உபயோகித்து வந்தாலும் அவற்றினை மக்கள் ஏற்றிக்கொள்ளும் அளவு மந்தகதியிலேயே இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


இது இவ்வாறு இருக்கு இந்தியாவின் ஒடிசா மற்றும் சண்டீஸ்கர் மாநிலத்ததைச் சேர்நத பழங்குடி மக்கள் சிவப்பு எறும்பினை பிடித்து அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பாரம்பரிய பொருட்களை கொண்டு சட்னி ஒன்றினை தயாரித்து கொரோனா தொற்றுக்கு எதிராக செயற்படுவதற்கு சாப்பிட்டு வருகின்றனர்.

இச்சட்னி சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல், இருமல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம்  மற்றும் சோர்வு  உள்ளிட்ட  பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாகஅமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் இது குறித்து ஒடிசா நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது சம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு இந்தியாவின் ஆயஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.