எதிர்வரும் 20ஆம் திகதி ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பின் துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

கடந்த 2020 ஆண்டு அமெரிக்க வாழ் மக்கள் கொரோனா தொற்று, இன பாகுபாடுகள், சூறாவளி, காட்டுத் தீ என்பவற்றால் பாரிய விளைவுகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துள்ளனர். எனவே 2020 ஆண்டு துயரம் மிகுந்த ஆண்டு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை இதனை நாங்கள் மாற்றிக் காட்டுவோம்.

அமெரிக்காவினை சிறந்த முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் திட்டத்தினை ஏற்கனவே நாம் கண்டு பிடித்துள்ளோம். 2021 இல் வரும் சவால்களை ஜனநாயகக் கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம்.

உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் ஆராக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.