குவைத் நாட்டுக்கு 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்பட 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

குவைத் நாட்டுக்கு 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்பட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘குவைத் அரசு 8 அப்பாச்சி ஏ.எச்.64இ ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும், 16 அப்பாச்சி ஏ.எச்.64டி ரக ஹெலிகாப்டர்களை மறு உற்பத்தி செய்யவும் கோரியுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.