உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் செயல்பாடு உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதே சமயம், உக்ரேன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தனக்கு இல்லை என ரஷ்யா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை, உக்ரேனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.