ஜெர்மனியில் 7 வயது சிறுவனுக்காக அவதார் ரோபோ ஒன்று பள்ளிக்கூடம் செல்கிறது.

ஜெர்மன்  நாட்டை சேர்ந்த ஜோசுவா மார்டிங்லி என்ற 7 வயது சிறுவன் கடுமையான உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாக, கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோசுவா, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக அவரது தாய் சிமோனி கூறுகிறார்.

இதனால் அவர் பள்ளிக்கு செல்ல முடியாததால் தற்போது அவருக்கு பதிலாக அவதார் என்ற ரோபோ, பள்ளிக்குச் சென்று, அந்தச் சிறுவன் வீட்டிலிருந்து கல்வி கற்க படிக்க உதவி வருகிறது.

ஜெர்மன் மாணவர் அவதார் ரோபோ மூலம் தனது ஆசிரியர் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

ஜோசுவா அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் அவதார் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்க உதவுகிறது. வீட்டிலிருந்தே ஜோசுவா தனது பாடங்களை படித்து வருகிறான்.